News March 22, 2024
தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் தே.ஜ. கூட்டணியில் பாஜக வேட்பாளராக பொன்.பாலகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
Similar News
News February 3, 2026
புழல் அருகே பரிதாப பலி!

திருவள்ளூர்: செங்குன்றத்தை அடுத்த சோழவரம் குமரன் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் குகன்(21). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு பணியை முடித்து இவர் பைக்கில் திரும்பிய போது, ஜி.என்.டி சாலையில் வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியதில், படுகாயமடைந்தார். பின்னர், சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்ப்றி நேற்று(பிப்.2) பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 3, 2026
திருவள்ளூரில் துடித்துடித்து பலி!

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெடியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி(38). இவரது கணவர் தனபால்(53). இவர்களது வீட்டின் கீழ் தளத்தில் விசைத் தறிகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று(பிப்.2) விசைத்தறிகளை இயக்க சென்ற ஜோதி, மின்சாரம் தாக்கி மயங்கினார். அவரது கணவர் உடனே அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அதில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News February 3, 2026
திருத்தணி: சிறுமிக்கு காதல் தொல்லை!

திருவள்ளூர்: திருத்தணி சந்து தெருவைச் சேர்ந்தவர் ஹரிஷ்(23). இவர் 17 வயது சிறுமியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ஹரிஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தார் அச் சிறிமி. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ், ‘நாம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமூக வளைதளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகாரில் ஹரிஷை போலீசார் கைது செய்தனர்.


