News March 28, 2024

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

image

கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பம் அடுத்த குருவிநாயனபள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை முதலே பல்வேறு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனையில் காந்திமதி மகளிர் சமூக நல அலுவலர் கலந்துகொண்டு வாகனங்களை ஆய்வு செய்துவருகின்றார். மேலும் அப்பகுதியில் சந்தேகப்படும் நபர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும்படையினர் ஆய்வு செய்துவருகின்றனர். இப்பகுதி ஆந்திர எல்லையோர பகுதியாகும்.

Similar News

News September 16, 2025

தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் கிருஷ்ணகிரி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னனூரில் அகழ்வாய்வில் கிடைத்த கல் கருவிகள் மற்றும் மண் மாதிரிகள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில், அவை கிமு 8450-ம் ஆண்டைச் சேர்ந்த நுண்கற்காலப் பொருட்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர் உலகின் ஆதிகுடி என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் திருச்சி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் குறிப்பிட்டுள்ளார்.

News September 15, 2025

கிருஷ்ணகிரி: இரவில் வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 15, 2025

கிருஷ்ணகிரி பெண்களுக்கு செம வாய்ப்பு…

image

கிருஷ்ணகிரியில் உள்ள TATA ELECTRONICS நிறுவனத்தில் காலியாக உள்ள 50 Assembly Line Operator பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 25 வரை இருக்கலாம். மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> செ.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!