News April 14, 2024
தேர்தல் பறக்கும் படையினர் ரூ.80,000 பறிமுதல்

நடுக்காவேரி யூனியன் வங்கி அருகில் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டியூர் நோக்கி வந்த டாட்டா லாரி வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல் பரமத்திவேலூர் தாலுகா புதுப்பாளையம், வள்ளியம்பட்டி தனராசு ஆவணங்களுமின்றி ரூ.80,000 எடுத்து வந்தார். அதை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News November 9, 2025
தஞ்சை: பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை

ஒரத்தநாடு அருகே தமிழ்ச்செல்வி என்ற பெண்ணிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த வீரமணி, வீரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து சுமார் 8.30 பவுன் தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்,இவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
News November 9, 2025
தஞ்சை நீதிமன்றம் அதிரடி

செங்கிப்பட்டியில் கடந்த 2020ம் ஆண்டு சத்தியபாமா என்ற பெண்ணிடம் 10 சவரன் தாலி செயினை வழிப்பறி செய்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருச்சியை சேர்ந்த சண்முகம் (35), அருள் (38) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
News November 9, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


