News March 25, 2024

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி: ரூ.450000 பறிமுதல்

image

ராமமூர்த்தி நகர் சோதனை சாவடியில் இன்று  தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த  இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில் அதில் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ.450000 எடுத்துச் சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக அதனை  கைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News October 29, 2025

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெட்டிஷன் மேளா

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று அக்.29 குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.  காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை தருமபுரி மாவட்ட மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களால் வழங்கப் 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

News October 29, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-29) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

News October 29, 2025

நீச்சல் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

image

அக்.29 மாநில அளவிலான பாரா நீச்சல் சாம்பியன்சிப் போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த வெங்கடேசன், விஜயகுமார், கார்த்திகேயன் ஆகியோர் 7 தங்கப்பதக்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கம் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா,மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!