News March 24, 2024

தேர்தல் பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. அதன்படி நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை கோவை தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார் இன்று (மார்ச்.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

Similar News

News November 15, 2025

கோவை: உள்ளூரில் வேலை அரிய வாய்ப்பு!

image

கோவையில் செயல்பட்டு வரும் Glen Kitchen Appliances நிறுவனத்தில் Sales Executive பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 18-35. Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண், பெண் இருபாலரும், வரும் 29ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 15, 2025

சூலூரில் மினி பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

image

திருப்பூர் மாவட்டம் அவினாசி கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(25). மினி பஸ்ஸில் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பணி முடித்துவிட்டு புறப்பட்ட போது பேருந்து நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் ஒருவரை இளைஞர்கள் தாக்கியதை தட்டி கேட்டுள்ளார். அப்பொழுது, அவரையும் தாக்கிய இளைஞர்கள் அரிவாளால் தலையில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

கோவை: +2 போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

கோவை மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!