News March 20, 2024
தேர்தல் பணி ஆசிரியர்கள் அவசர கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மார்ச் 24 மற்றும் ஏப்.7ம் தேதிகளில் நடக்கிறது. அதில் 24ம் தேதி பங்குனி உத்திரம், குருத்தோலை ஞாயிறு ஆகிய விழாக்கள் இருப்பதால் பயிற்சி வகுப்பை மாற்று தேதியில் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 20) அவசர கோரிக்கை மனு அளித்தனர்.
Similar News
News April 9, 2025
தமிழ் பெயர் பலகை வைக்க கால அவகாசம்

நெல்லையில் கடைகள்,வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை கண்காணிக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரை தலைவராகக் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மே 2ஆவது வாரத்திற்குள் 100% பெயர் பலகை வைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News April 9, 2025
நெல்லையில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் 25 உற்பத்தியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 10-ம் வகுப்பிற்கு கீழ் படித்த 3 வருடம் அனுபவம் உள்ள 18 – 50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News April 9, 2025
தமிழ் பெயர் பலகை வைக்க மே 2 வரை கால அவகாசம்

கடைகள் வணிக நிறுவனங்கள் உணவகங்கள் தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற அரசு செயல்படுத்தி கண்காணிக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரை தலைவராகக் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மே 2ஆவது வாரத்திற்குள் 100% பெயர் பலகை வைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.