News April 19, 2024
தேர்தல் பணியில் 7,556 ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள்!

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடலூர் லோக்சபா தொகுதியில் இன்று நடைபெற்று வரும் தேர்தல் பணியில் 7,556 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் கடலூர் லோக்சபா தொகுதியில் உள்ள 1509 ஓட்டுச் சாவடி மையங்களில் 119 ஓட்டு சாவடிகள் பதட்டமான ஓட்டுசாவடி, 53 ஓட்டு சாவடிகள் மிக பதற்றமான ஓட்டுச்சாவடி என கண்டறிந்து துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

கடலூர் மாவட்ட மக்களே, உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
கடலூர்: டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூரைச் சேர்ந்தவர் டிரைவர் சிவகுமார் (55). இவர் கடந்த வாரம் மைசூருக்கு சென்றபோது விபத்தில் சிக்கினார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தில் உள்ள தனது அக்கா மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் சிவக்குமார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 6, 2025
கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 6) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 31.4 மில்லி மீட்டர், சிதம்பரம் 26.8 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 17 மில்லி மீட்டர், விருத்தாசலம் 14 மில்லி மீட்டர், புவனகிரி 7 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 4.8 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 117.55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


