News April 18, 2024

தேர்தல் நேரத்தில் மின்தடையா?

image

பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள  வாக்குச்சாவடிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும்   தேர்தல் நடக்கும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டி போன்  நம்பர் பதிவு செய்யப்பட்டு சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது.

Similar News

News August 18, 2025

தஞ்சாவூர் மக்களே கண்டிப்பாக இதை CHECK பண்ணுங்க.!

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது ஏமாறாமல் இந்த எண்ணுக்கு 9498452120 அழைத்து CHECK செய்த பிறகு வாங்குங்க. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 18, 2025

பொதுமக்களிடம் இருந்து 510 புகார் மனுக்கள் பெறப்பட்டன

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News August 18, 2025

தஞ்சையில் அடையாள தெரியாத ஆண் சடலம்

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இராஜாமடம் கிளைவாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஒரத்தநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எவ்வாறு இறந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!