News March 23, 2024
தேர்தல்: நேரடியாக மோதும் பாஜக-காங்கிரஸ்

நெல்லை மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் அல்லது அசோக் ரூபி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 15, 2025
நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளிலும் இனி மாணவர்களின் பைகளை சோதனை செய்ய நெல்லை மாவட்ட முதன்மை கல்வி துறை இன்று (ஏப்.15) உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இனி தனியார் பள்ளிகளிலும் சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News April 15, 2025
நெல்லை: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்

நெல்லை பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் இன்று வெளியிட்ட செய்தியில், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் நோக்கில் ஏப்ரல்.1 முதல் ஏப்ரல் 30 வரை “வாடிக்கையாளர் சேவை மாதம்” எனும் நிகழ்வை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் சங்கரன்கோயில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 17.4.2025 அன்றுநடைபெறும். புதிய FTTH இணைப்பு சிம் கார்டுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என கூறியுள்ளார்.*ஷேர்
News April 15, 2025
நெல்லை: தவறவிட்ட குழந்தையை உரிமை கோர 30 நாட்கள் கெடு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரம் விலக்கு பகுதியில் 3 வயது மதிக்கத்தக்க சிறுமி ஜெசிக்கா பாதுகாப்பற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தைக்கு உரிமை கோர விரும்புவோர் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் 30 நாட்களுக்குள் அணுக வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.