News April 12, 2024
தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி முகாம்

மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான (Micro observer) இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஏப்ரல் 11) நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ் குமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பேசினார்.
Similar News
News August 16, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று (ஆக.15) இரவு முதல் இன்று(ஆக.16) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்காள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News August 15, 2025
ஆம்புலன்ஸ் சேவைக்கு நற்சான்றிதழ்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 79 வது சுதந்திர விழா மாவட்ட கலெக்டர் சிவ சௌந்தரவல்லி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா முன்னிலையில் கொண்டாடப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு சிறப்பாக பணி புரிந்ததின் காரணத்திற்காக நற்சான்றிதழ் வழங்கப்பட்டது
News August 15, 2025
வேலூர் மாவட்டம் முழுவதும் 90 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்கும் மாவட்டம் முழுவதும் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் இன்று (ஆகஸ்ட் 15) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.