News March 21, 2024
தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.21) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் யாளர் பாலகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் என பலரும் கலந்து கொண்டனர்
Similar News
News January 3, 2026
கோவை TNAU-வில் தேனீ வளர்ப்பு பயிற்சி!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வரும் (06.01.2026) அன்று நடைபெற உள்ளது. இதில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் தேனீக்கு உணவு தரும் பயிர்கள், தேனைப் பிரித்தெடுத்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
News January 3, 2026
கோவை: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

கோவை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <
News January 3, 2026
கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு!

பெங்களூரு ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சில விரைவு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 3 அன்று திருவனந்தபுரம்–பெங்களூரு விரைவு ரயில் பையப்பனஹள்ளி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் எர்ணாகுளம்–பெங்களூரு மற்றும் பெங்களூரு–எர்ணாகுளம் ரயில்களின் இயக்க நேரம் மற்றும் தொடக்க நிலையம் மாற்றப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


