News April 13, 2024
தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கும்பகோணம் தபால் கோட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். கும்பகோணம் தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கும்பகோணம் பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது.
Similar News
News January 27, 2026
தஞ்சை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 27, 2026
தஞ்சை மாவட்டத்தை பற்றிய தகவல்!

தஞ்சை மாவட்டம் என்பது வரலாற்றிலேயே மிக முக்கியமான மாவட்டமாகும். இந்த மாவட்டமானது 3 கோட்டங்களையும், 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 589 கிராம பஞ்சாயத்துகளையும் கொண்டுள்ளது. மேலும் 620 கிராமங்களையும், 2 மாநகராட்சிகளையும், 1 நகராட்சிகளையும், 507 அஞ்சலகங்களையும், 53 காவல் நிலையங்களையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 27, 2026
தஞ்சை: கேஸ் மானியம் வரவில்லையா? இத TRY பண்ணுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா? உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.


