News January 25, 2026
தேர்தல் அறிவித்த பிறகுதான் எல்லாம் முடிவாகும்: வைகோ

தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதிகளை கொடுக்காமல் ஓரவஞ்சகம் செய்த PM மோடி, நேற்று வெறும் பொய்களை மட்டும் அவிழ்த்துவிட்டு சென்றதாக வைகோ விமர்சித்துள்ளார். தேர்தல் அறிவித்த பிறகுதான், எத்தனை தொகுதியில் போட்டி, தனிச் சின்னத்தில் போட்டியா என்பதெல்லாம் என்பது குறித்து முடிவுசெய்யப்படும். அதுகுறித்து இப்போதே சொல்ல முடியாது எனக் கூறிய அவர், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.
Similar News
News April 3, 2026
துணை வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார் விஜய்

விஜய், தனது பெரம்பூர் வேட்புமனுவில் மதுரை மாநாடு வழக்கு குறித்து குறிப்பிடவில்லை. இதனால் அவரது மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.. இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் திருத்தப்பட்ட மனுவை மீண்டும் அவர் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் <<19552701>>மதுரை மாநாட்டின்<<>> போது மீது பதியப்பட்ட வழக்கு உள்பட விடுப்பட்ட தகவல்களை நாளை விஜய் தாக்கல் செய்ய உள்ளார்.
News April 3, 2026
2027 WC-ல் விராட், ரோஹித் விளையாட வேண்டும்: யுவராஜ்

உலகக்கோப்பை தொடருக்கான அணியை இளம் வீரர்களை வைத்து மட்டும் உருவாக்க முடியாது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ரோஹித், விராட் அணிக்கு நிலைத்தன்மை அளிப்பதோடு, வெற்றிபெறும் உத்வேகத்தையும் வழங்குவார்கள் என பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் தகுந்த முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், நிச்சயம் அவர்கள் 2027 WC அணியில் இடம்பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News April 3, 2026
காங்., 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

நாங்குநேரி – ரூபி மனோகரன், குளச்சல்- தாரகை கத்பர்ட், விளவங்கோடு – டி.டி.பிரவீன், ஈரோடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன், உதகை – ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் – சூரியபிரகாஷ், சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு, மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது, அறந்தாங்கி – ராமச்சந்திரன், காரைக்குடி – மாங்குடி, சங்கரன்கோவில் – சங்கை கணேசன், அம்பாசமுத்திரம் – வி.பி.துரை ஆகியோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>


