News March 29, 2024
தேர்தல் அறிகுறியே தெரியாத நிலை

தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை என மக்கள் கூறுவதைக்காண முடிகிறது. ராயக்கோட்டையில் அண்ணா சிலையை மூடியுள்ளதை தவிர வேறுவிதமான தேர்தல் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.சாதாரணமாக கிளைச்செயலாளர்கள் கூட அதைப்பற்றி பேசுவதைக்காணமுடியவில்லை. பிரச்சாரத்திற்கு 4 ஆம் கட்ட பேச்சாளர்கள் கூட வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 18, 2026
கிருஷ்ணகிரியில் 250 கோழிகள் இலவசம்!

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.
News February 18, 2026
கிருஷ்ணகிரியில் EB பில் எகிறுதா..?

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா? <
News February 18, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.18) நீர்மட்டம் 49.9 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்


