News February 24, 2026
தேர்தலுக்கு பின் அதிமுக சசிகலா வசமாகும்: திவாகரன்

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில், சசிகலா தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டம் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை சசிகலா வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், புது கட்சி தேர்தலை சந்திக்கும் என்றும், தேர்தலுக்கு பின்னர் சசிகலா வசம் அதிமுக செல்லும் என கூறியுள்ளார்.
Similar News
News February 27, 2026
கர்ப்பிணிகளுக்கு ₹11,000 வழங்கும் அரசு திட்டம்

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <
News February 27, 2026
தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டும் தவெக

தேர்தலையொட்டி, மார்ச் 1-ல் தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் நடைபெறும் இக்கூட்டத்தில், தேர்தல் பரப்புரை, வாக்குச்சாவடி முகவர்களின் பணி உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பார்கள், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல்வேறு அணியினர் தவறாமல் பங்கேற்குமாறு புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
News February 27, 2026
பிரதமர் மோடி பதவி விலகல்.. Factcheck

PM மோடியை பதவி விலகுமாறு SC உத்தரவிட்டுள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB Factcheck) விளக்கம் அளித்துள்ளது. அதில், இதுபோன்ற எந்த உத்தரவையும் SC பிறப்பிக்கவில்லை; இது பொய்யான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை தகவல்களை அறிந்து கொள்ள, 8799711259 வாட்ஸ்ஆப் எண், factcheck@pib.gov.in மெயிலில் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


