News November 23, 2025

தேர்தலுக்காக திருமா போடும் ஸ்கெட்ச்!

image

2021-ல் 6 தொகுதிகள் போட்டியிட்ட விசிக, தற்போது டபுள் டிஜிட் கேட்பதாக கூறப்படுகிறது. அதன்படி செய்யூர், திருப்போரூர், காட்டுமன்னார்கோவில், நாகை, அரக்கோணம், வானூர், புவனகிரி, கள்ளக்குறிச்சி, குன்னம், தருமபுரியின் ஹரூர், ஊத்தங்கரை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஊத்தங்கரையும், ஸ்ரீபெரும்புதூரும் காங்., தொகுதி என்பதால் திமுக தயங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News February 10, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 10, தை 27 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News February 10, 2026

திமுக கூட்டணிக்குள் அடிக்கும் ‘புயல் காற்று’

image

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்குள் மோதல் வெடித்துள்ளது. தொகுதி பங்கீடு இழுபறி, ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தால் காங்., – திமுக இடையே சலசலப்பு ஏற்பட்டது. இருதரப்பும் சற்று அமைதி காத்து வரும் நிலையில், தற்போது காங்., விசிகவுக்கும் வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இது வெளிப்படையாக நடந்திருப்பதால், அக்கட்சிகளின் நிர்வாகிகள் மத்தியில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

News February 10, 2026

ஜான் பாண்டியனால் கூட்டணி மாறும் கிருஷ்ணசாமி?

image

NDA-வில் இணைந்துள்ள ஜான் பாண்டியன், இந்த முறை தென்மாவட்டத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, ஓட்டப்பிடாரம் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்க பாஜக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதே தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ள கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் இணைவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், தவெக பக்கம் செல்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறாராம்.

error: Content is protected !!