News January 3, 2026

தேர்தலில் யாருக்கு வெற்றி.. லயோலா கணித்துக்கணிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் IPDS-ன் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 234 தொகுதிகளில் 81,375 பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில் ஸ்டாலின் முதலிடம், விஜய் 2-ம் இடம், EPS 3-ம் இடம் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் இந்துக்கள்-81.71%, கிறிஸ்துவர்கள்-10.55%, இஸ்லாமியர்கள்-7.75% பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 7, 2026

அதிமுக முட்டுச்சந்தில் தான் நிற்க வேண்டும்: உதயநிதி

image

பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து அதிமுக கூட்டணி வைத்துள்ளது; ஆனால், திமுக யாருக்கும் பயப்படாது என்று விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் DCM உதயநிதி பேசியுள்ளார். மோடியின் கால்களை பார்த்து EPS & அதிமுக நடந்தால் முட்டுச்சந்தில் தான் நிற்க வேண்டும் எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் எந்த அமைப்பும், கொள்கையும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்தால் ஒரு பயனுமில்லை என்று தவெகவை சூசகமாக தாக்கிப் பேசினார்.

News February 7, 2026

வில்லன் நடிகர் சுனில் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வில்லன் <<19075789>>நடிகர் சுனில் தாபா<<>>, இன்று காலமானார். அவரது மறைவுக்கு பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். GOD BLESS YOUR SOUL SIR! என SM-ல் பதிவிட்டுள்ள அவர், ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் உங்களுடன் பணியாற்றியது எப்போதும் நினைவில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் சுனில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 7, 2026

நல்லா சாப்பிட்டாலும் குழந்தை ஒல்லியாவே இருக்கா?

image

குழந்தைகள் கண்ட கண்ட இடங்களில் விளையாடிவிட்டு கையை முறையாக கழுவாமல் உணவு சாப்பிடுகின்றனர். இதனால் அவர்கள் வயிற்றுக்குள் கிருமிகள் ஈஸியாக நுழைய வாய்ப்புள்ளது. இதனால் வயிற்றில் புழுக்கள் உருவாகி அவர்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடலில் ஒட்டாமல் போகலாம். எனவே, வாரத்திற்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடிப்பதை பழக்கப்படுத்துங்கள். அல்லது தினமும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்க வைக்கலாம். SHARE.

error: Content is protected !!