News January 18, 2026

தேர்தலில் முந்தும் அதிமுக.. திமுக அதிர்ச்சி

image

கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாவிட்டாலும் தேர்தல் அறிக்கையில், திமுகவை முந்திக் கொண்டது அதிமுக. இதற்கு <<18885829>>ஜோதிடம்<<>> ஒரு காரணமாக கூறப்பட்டாலும், திமுகவின் சில திட்டங்கள் கசிந்தது மற்றொரு காரணம் என்கின்றனர். குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்தி அறிவிக்க திமுக திட்டமிட்டிருந்ததாம். அதனால், முதலில் துண்டை போட்டு EPS அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால், திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

Similar News

News January 29, 2026

OPS இதற்குதான் ஏங்குகிறார்: KC பழனிசாமி

image

OPS-க்கு திமுகவில் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்பது தெரியவில்லை என KC பழனிசாமி கூறியுள்ளார். உழைத்து மேலே வருபவர்கள் தன்னையே நம்புவார்கள்; அதிர்ஷ்டத்தில் வருபவர்கள் தொடர்ந்து அதிர்ஷ்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றார். மேலும், 3 முறை அதிர்ஷ்டத்தில் கிடைத்த முதல்வர் பதவி மீண்டும் கிடைக்காதா என OPS ஏங்குவதாகவும் விமர்சித்துள்ளார்.

News January 29, 2026

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $431.92 (இந்திய மதிப்பில் ₹39,754) உயர்ந்து $5,518.44-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $11.94 அதிகரித்து $118.1 ஆக உள்ளது. இதனால் இன்று இந்திய சந்தையில் தங்கம் விலை அதிகமாக உயர வாய்ப்புள்ளது.

News January 29, 2026

அஜித் பவார் இடத்தை பிடிக்கப் போவது யார்?

image

தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனவர் அஜித் பவார். எனினும் மீண்டும் சரத் பவாருடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் எழுந்தன. இந்நிலையில் எதிர்பாரா விதமாக அஜித் பவாரின் திடீர் மரணம் அக்கட்சியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவி ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை வலது பக்கம் Swipe செய்து பாருங்க..

error: Content is protected !!