News January 25, 2026
தேர்தலில் போட்டியிடவில்லை: பாஜக MLA சரஸ்வதி

மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏவான சரஸ்வதி, வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருக்கும் சரஸ்வதி, மாற்றுக்கட்சியில் இணையப்போவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், தனக்கு 80 வயது ஆகிவிட்டதால், இனி தேர்தல்களில் போட்டியிட போவதில்லை. NDA சார்பில் மொடக்குறிச்சியில் யார் களம் கண்டாலும் தேர்தல் பணி செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
சென்னை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
எதிர்கட்சி யார் என்பதில்தான் விஜய் போட்டி: கடம்பூர் ராஜு

தவெக வெறும் கானல் நீர் தான் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். வெயில் காலம் தொடங்கிவிட்டதாக கூறிய அவர், இச்சமயத்தில் தென்படும் கானல் நீர் சில நிமிடங்களில் காணாமல் போய் விடும் எனவும் பேசியுள்ளார். மேலும், விஜய் ‘தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி’ என்று கூறுவது, அவர்களில் யார் எதிர்க்கட்சியாக வரப்போகின்றனர் என்பதற்கான போட்டியாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
News February 10, 2026
கேசவ விநாயகத்தின் பொறுப்பில் பிரஷோப குமார்?

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 13 ஆண்டுகளாக அப்பொறுப்பிலிருந்த கேசவ விநாயகம் நேற்று திடீரென விடுவிக்கப்பட்டார். அதன் <<19095269>>பின்னணியில் அண்ணாமலை<<>> கூறிய பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக பேச்சு எழுந்தது. இந்த நிலையில், RSS-ன் வட தமிழக அமைப்பாளராக இருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த பிரஷோப குமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


