News January 25, 2026

தேர்தலில் தவெக தனித்து போட்டியா? KAS சூசகம்

image

திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதிசெய்துள்ள நிலையில், இன்னும் தவெக தரப்பில் கூட்டணி முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்று தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தவெகவில் இரண்டு லட்சம் பேருக்கு பதவி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தவெக தனித்தே களம் காணும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 31, 2026

குமரியில் 5 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியது ஏன்?

image

குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5-ஐ கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியதால் விமர்சனம் எழுந்தது. ஆனால், EPS இதை காரணத்தோடு தான் செய்திருக்கிறாராம். கடந்த லோக்சபா தேர்தலில் குமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் நாதகவை விட அதிமுக குறைந்த வாக்குகளை வாங்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், அந்த தொகுதிகள் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டதாம்.

News March 31, 2026

₹15,000 சம்பளம், 5,000 பணியிடங்கள்… APPLY NOW

image

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும். SHARE.

News March 31, 2026

அதிமுகவுக்காக நெல்லையை விட்டுக் கொடுத்தேன்: நயினார்

image

நெல்லை தொகுதியில் பலமுறை போட்டியிட்டு இருப்பதாகவும், இந்த முறை அதிமுக போட்டியிட விரும்பியதால், தான் விட்டுக்கொடுத்ததாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் தெரிவித்துள்ளார். எங்கு நின்றாலும் நெல்லைக்கு நான் தான் செல்லப்பிள்ளை எனக் கூறிய அவர், பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதமாவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை; விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!