News April 5, 2026
தேர்தலில் இருந்து பின் வாங்க இதுதான் காரணம்: திருமா

தேர்தலில் இருந்து பின்வாங்கியது குறித்து திருமா மீண்டும் விளக்கமளித்துள்ளார். இத்தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு செல்வது, என்னுடைய நோக்கத்திற்கு பயன் தரும்; விளிம்பு நிலை மக்களுக்கான பிரச்னையை பேச முடியும் என நம்பினேன். அதன் அடிப்படையில் நான் போட்டியிட முடிவு எடுத்தேன். ஆனால், எங்கள் கூட்டணி நலனுக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டதால் எனது முடிவை மாற்றிக் கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 11, 2026
மாதம் ₹20,500 கொடுக்கும் அசத்தல் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மாதம் ₹20,500 வரை பெற வழி செய்கிறது. இத்திட்டத்தில் மொத்தமாக ₹30 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து 8.2% வட்டியுடன் ஆண்டுக்கு ₹2,46,000 வட்டி வருமானம். 12-ஆக வகுத்தால், மாதம் ₹20,500 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் சேரமுடியும். அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.
News April 11, 2026
போர் பதற்றம்.. தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம் விலை இந்த வாரத்தில் சவரனுக்கு ₹1,200 என்ற நிலையில் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த 4-ம் தேதி சனிக்கிழமை சவரன் ₹1,11,600-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹1,12,800-க்கு விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருவதாகவும், போர் தணிந்தால் விலை கணிசமாக உயரும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
News April 11, 2026
RSS-காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம்: தனியரசு

நாக்பூரிலிருந்து வரும் RSS-காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம், பெரியார் மண்ணில் இருந்து வரும் தனக்கு அங்கீகாரம் அளிக்காதது வியப்பாக இருப்பதாக திமுகவை தனியரசு விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர், யாரையும் நம்பி பயணிக்கும் அளவுக்கு அரசியல் களம் நேர்மையாக இல்லை, இனி யாரும் என்னை மெளனிக்க முடியாத அளவுக்கு சுயமாகவும், என்னை நம்பி வருபவர்களை இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்படுவேன் என தெரிவித்தார்.


