News October 31, 2025
தேனி:10 வயது சிறுமிக்கு உறவினரால் நேர்ந்த கொடுமை

பெரியகுளம் அருகே பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியை சிறுமியின் உறவினரான பரமேஸ்வரன் என்பவர் 2024.ல் பாலியல் வன்புணர்வுசெய்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் பரமேஸ்வரனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (அக்.30) பரமேஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
Similar News
News October 31, 2025
தேனி CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News October 31, 2025
தேனி: 65 வயது மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (65). இவருக்கு கடந்த பத்து வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த மூதாட்டி நேற்று (அக்.30) அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்.
News October 31, 2025
தேனி: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


