News December 12, 2025
தேனி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தேனி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546-255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
Similar News
News December 14, 2025
தேனி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

தேனி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 14, 2025
தேனி: மனைவி பிரிவால் கணவருக்கு நேர்ந்த விபரீதம்

அம்மாபட்டியை சேர்ந்த பாண்டியராஜன், தாரணி தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே தாரணி கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியராஜன் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டில் இருமிக்கொண்டே இருந்தார். சிகிச்சைக்காக GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News December 14, 2025
தேனி: குழந்தை இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை.!

தேனி பகுதியை சேர்ந்தவர் நந்தக்குமார் (27). இவரது மனைவி ஜெயப்பிரதா இந்த தம்பதிக்கு 2.5 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த மாதம் குறை பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்து, பிறந்த சில தினங்களில் உயிரிழந்தது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த நந்தகுமார் நேற்று முன்தினம் (டிச.12) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.


