News November 20, 2025
தேனி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தேனி மக்களே, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 27, 2025
போடி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடை வழங்கிய எம்பி

போடி ஒன்றியம் கோடாங்கிபட்டியில் ஆதரவற்ற இல்லத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சீருடைகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் ஐயப்பன். அயலக அணி செயலாளர் ராஜன், முஜிப் ரஹ்மான் மற்றும் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News November 27, 2025
13-18 வயதுள்ள குழந்தைகளுக்கு விருதுடன் ரூ.1 லட்சம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைக்கும் 13 வயது முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு ரூ.1 இலட்சம் பரிசுத்தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இணையத்தள முகவரியில்
(https://awards.tn.gov.in) 29.11.2025 க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 27, 2025
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


