News August 10, 2025
தேனி: IOB வங்கியில் வேலை இன்று முதல் APPLY பண்ணலாம்

தேனி மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். <
Similar News
News August 10, 2025
தேனியில் மழை பெய்யும் – வானிலை மையம்

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 9 மணி வரை இடி, மின்னலுடன கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
தேனியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தேனியில் தமிழக அரசு வழங்கும் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு தேனி கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 10, 2025
சிறப்பாக பணியாற்றிய தேனிக்கு விருது

தமிழகத்தில் வளர்ச்சியில் பின்தங்கிய (போக்கஸ் பிளாக்) எனும் 50 வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன. அதில் 3 ஆண்டுகளில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து முடித்த தேனி மாவட்டத்திற்கான விருதை சென்னையில் நடந்த விழாவில் மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சனிடம் மாவட்ட ஊராட்சி அதிகாரிகள் பெற்றனர். அவர்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பாராட்டினார்.