News December 21, 2025

தேனி: 47 பயணிகளுடன் வயலில் பாய்ந்த ஆம்னி பஸ்

image

கேரளாவிற்கு தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆம்னிபஸ் சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் ரோட்டில் சென்றபோது பைபாசில் எதிரில் வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதுவது போல் வந்துள்ளது. சுதாரித்த டிரைவர், வலதுபுறம் தடுப்பு கம்பிகளை உடைத்து பஸ்சை நெல் வயலுக்குள் இறக்கினார்.இதனால் டிரைவர் ஆலன்சார்ஜ், 47 பயணிகளுக்கும் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் உயிர் தப்பினார்கள். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 23, 2025

தேனி: பைக் மீது பேருந்து மோதி இருவர் படுகாயம்

image

பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் நேற்று (டிச.22) அவரது பைக்கில் அவரது நண்பரான சுப்பிரமணி என்பவரை அழைத்துக் கொண்டு பெரியகுளம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் தினேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த பேருந்து இவர்களது பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News December 23, 2025

தேனி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

image

தேனி மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <>க்ளிக் செய்து <<>>வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடுங்கள் என்பதை தேர்ந்தெடுத்து பெயர், எந்த சட்டமன்ற தொகுதியில் கடைசியாக வாக்களத்தீர்கள் போன்ற விவரங்களை சரியாக பூர்த்தி செய்தால் உங்க பழைய VOTER ID கிடைச்சுடும். அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 23, 2025

தேனி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைக்கலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!