News November 16, 2025

தேனி: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

image

தேனி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News November 16, 2025

தேனி மருத்துவகல்லூரி மாணவிகள் விபத்தில் படுகாயம்

image

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ராகினி என்பவர் நேற்று (நவ.15) அவரது இருசக்கர வாகனத்தில் அவரது தோழியான மீனாட்சி என்பவரை அழைத்துக் கொண்டு தேனி சென்று விட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பி உள்ளார். மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் மாணவிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு.

News November 16, 2025

தேனி: வயிற்று வலியால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (37). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததன் காரணமாக அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று (நவ.15) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு

News November 16, 2025

தேனியில் 15 பேர் சேர்ந்து பெண் மீது தாக்குதல்

image

பெரியகுளம், எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவரது மனைவி மாலையம்மாள். இதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நவீன்குமார் இவரது நண்பர்கள் விஷ்ணு, ஜீவானந்தம் உட்பட 15 பேர் மாலையம்மாள் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் நவீன்குமார் உட்பட 15 பேர் வழக்கு (நவ.15) பதிவு.

error: Content is protected !!