News January 31, 2026

தேனி: 124 கிலோ புகையிலை கடத்தல்

image

கடமலைக்குண்டு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.30) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 124 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட முருகன் (53), பிரபாகரன் (32) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Similar News

News February 10, 2026

தேனி: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை அனுகவும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 10, 2026

பெரியகுளம்: இளம்பெண் கழுத்து அறுத்துக் கொலை

image

தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமாரி. கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜா கத்தியால் தங்கமாரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர்.

News February 10, 2026

தேனி: கஞ்சா வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது

image

உத்தமபாளையம், கம்பம் பகுதிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக SP-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது உத்தபாளையம்-குமுளி பைபாஸ் சாலையில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சாக்கு பைகளில் 21 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கஞ்சா கடத்தல் தொடர்பாக வனிதா, அகில் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!