News October 9, 2025

தேனி: 10th போதும்; ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th முதல் டிகிரி வரை படித்தவர்கள், கல்வித்தகுதிக்கேற்ப இங்கே<> கிளிக் <<>>செய்து 14.10.2025 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 16, 2025

தேனி: சிறுவன் ஓட்டிய பைக் மோதி ஒருவர் படுகாயம்

image

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ரபிக் (48). இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் சின்னமனூர் சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 14 வயது சிறுவன் ரபீக் பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார். இந்த விபத்தில் ரபீக் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு.

News November 16, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (15.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 15, 2025

66.90 அடியாக குறைந்த வைகை அணையின் நீர்மட்டம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து முதல் போக மற்றும் ஒருபோக பாசனம், மதுரை மாவட்ட தேவை மற்றும் குடிநீருக்காக என அணையில் இருந்து வினாடிக்கு 2299 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் நீர் வரத்து 1402 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இன்று (நவ.15) 66.90 அடியாக குறைந்து காணப்படுகிறது.

error: Content is protected !!