News September 14, 2024

தேனி: 10 கிமீ பாம்புடன் பயணித்த டிரைவர்

image

சின்னமனூர் அருகே உள்ள பொன்னி லாரி சர்வீஸ் டிரைவர் குப்பமுத்து புலிக்குத்தி வாடகைக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் உடனிருந்த நபர் பாம்பினை கண்டு குப்பமுத்துவிடம் தெரிவித்தார். உடனே அவர் அச்சப்படாமல் அந்த வாகனத்தை சுமார் 10 கிலோமீட்டர் அந்தப் பாம்புடன் பயணம் மேற்கொண்டு சின்னமனூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து தீயணைப்பு அதிகாரிகள் மூலம் அந்த பாம்பை மீட்டு ஒப்படைத்தார்.

Similar News

News July 6, 2025

தேனியில் கிணற்றில் பிணமாக கிடந்த கூலித்தொழிலாளி

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(60). தேவதாஸ் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடலை க.விலக்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 5, 2025

மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

image

தேனி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News July 5, 2025

வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தேனி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தேனி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!