News October 29, 2025
தேனி வைகை அணையில் இன்று தண்ணீர் திறப்பு

தேனி மாவட்ட வைகை அணையில் இருந்து, மதுரை, திண்டுக்கல் செல்லும் 58 கிராம கிட்ட கால்வாயில் 300 மி.கா அடி தண்ணீரை நீர் இருப்பு மற்றும் நீர்வாகத்தினை பொறுத்து தேவைக்கேற்ப 29.11.25 முதல் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் ஆகியோர் திறந்து வைத்தனர்.
Similar News
News October 29, 2025
தேனி விவசாயிகளே நவ.15 தான் கடைசி.!

தேனி மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் வரும் நவ.15ம் தேதிக்குள் நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் குத்தகைதாரர்கள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இ சேவை மையங்கள், அரசுடைய ஆக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக காப்பீடு செய்து கொள்ளலாம்.
News October 29, 2025
திருக்கல்யாணத்தில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய் 2 லட்சத்திற்கு ஏலம்

போடி சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (அக்.28) திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அபிஷேகத்திற்கு வரும் ஒரு தேங்காய் ஏலம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த விழாவில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் தேங்காயை ராஜன் என்பவர் ரூ 2 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.
News October 29, 2025
தேனி மாவட்டத்தில் நவ.1.ல் கிராம சபை கூட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நவ.1 அன்று காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் ஊராட்சி தனி அலுவலர் மற்றும் பி.டி.ஓ.,க்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. தங்கள் ஊராட்சிகளில் நடக்கும் இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து தெரிவித்து அதற்கான பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


