News February 14, 2026
தேனி: வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி

போடி, சிலமலையில் மருந்துக் கடை நடத்தி வருபவர் சுனில் (52). இவர் நேற்று முன் தினம் அவரது காரில் கேரளா சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளார். அப்போது, லோயர்கேம்ப் பகுதியில் சபரிமலைக்கு சென்ற வேன் இவரது காா் மீது மோதியது. இந்த விபத்தில் சுனில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். மேலும், வேனில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து குமுளி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 16, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 16.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News February 16, 2026
3 நாட்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க கெடு

பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் மொத்தம் 92 துப்பாக்கிகள் உள்ளன. இவற்றில் 4 துப்பாக்கிகள் வங்கிகள் பாதுகாப்புக்கும், 88 துப்பாக்கிகள் தனிநபர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் இன்று (பிப்.16) முதல் பிப்.18 வரை மூன்று நாட்களுக்குள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என அறிவிப்பு.
News February 16, 2026
தேனி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


