News March 25, 2025

தேனி வாலிபரை கடத்திய கடற்கொள்ளையர்

image

தேனியைச் சேர்ந்தவர் லட்சுமண பிரதீப் முருகன். மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் 2ம் நிலை கேப்டனாக பணியாற்றுகிறார். இந்நிலையில், மார்ச்.17 ல் வணிக கப்பலில் மத்திய ஆப்ரிக்க பகுதியில் சென்றபோது, கடற்கொள்ளையர் கப்பலைத் தடுத்து லட்சுமண பிரதீப் உள்ளிட்ட 10 பேரைக் கடத்தினர். அவர்கள் தற்போது வரை எங்குள்ளனர் எனத் தெரியவில்லை. இவர்களில் லட்சுமண பிரதீப் முருகன் உட்பட மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

Similar News

News November 13, 2025

தேனி: நெஞ்சுவலியால் ஒருவர் தற்கொலை

image

கம்பம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (65). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் மது அருந்தக்கூடாது என டாக்டர் அறிவுறுத்திய நிலையிலும் அசோகன் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி அதிகரித்துள்ளது. வலி பொறுக்காமல் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் போலீசார் வழக்கு (நவ.12) பதிவு.

News November 13, 2025

தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News November 13, 2025

தேனி: பைக் மீது டிராக்டர் மோதி இருவர் உயிரிழப்பு

image

தேனியை சேர்ந்தவர் சிவா (25). இவர் அவரது பைக்கில் அவரது நண்பரான அருண் (32) என்பவரை அழைத்து வைத்துக் கொண்டு நேற்று (நவ.12) திண்டுக்கல் குமுளி பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். கோட்டூர் அருகே பைக் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் டிராக்டர் இவர்களது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.

error: Content is protected !!