News November 23, 2025

தேனி வாக்காளர்களே… கடைசி தேதி அறிவிப்பு

image

தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் படிவத்தை தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து சமர்பித்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் படிவங்களை சமர்பிக்க 04.12.2025 கடைசி நாள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளது. இதனை எல்லோருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News November 27, 2025

பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

தேனி மாவட்டத்தில் வாக்காளர் கணக்கிட்டு படிவங்கள் பணியை சிறப்பாக செய்து படிவம் திரும்ப பெறுதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் பணியினை 100% முழுமையாக நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இன்று (நவ 27) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தொிவித்தார். இதில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News November 27, 2025

தேனி: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 27, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நாளை 28.11.2025 காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் தலைமையில் விவசாயிகள் குறைதீர் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!