News October 22, 2025
தேனி: வாகன விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

தேனி மாவட்டம் கன்னிசேர்வைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்நாத் (16). இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தாத்தாவின் டூவீலரை எடுத்துச் சென்றுள்ளார். சின்னமனுார் ஹைவேவிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த மீடியனில் பைக் மோதி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ராம்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு (அக்.21) பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 22, 2025
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கனமழை பெய்து வருதாலும், ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிகளில் வேடிக்கை பார்க்க செல்வது, செல்பி எடுப்பது மற்றும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
தேனி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்., இத பன்னுங்க

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 % முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
தேனியில் ஒரே நாளில் 19 டன் குப்பைகள் அகற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் உள்ள அரண்மனை தெரு பாரஸ்ட் ரோடு கடைவீதி சுதந்திர வீதி புதிய பேருந்து நிலையம் அக்கிரகாரம் பெருமாள் கோவில் தெரு தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 20ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 19 டன் குப்பைகள் சேர்ந்துள்ளனர். அதை பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அகற்றி உள்ளனர். என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.