News December 24, 2025

தேனி: வாகனம் மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்

image

கோடங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43). இவர் நேற்று முன்தினம் இரவு அவரது பைக்கில் போடிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சுரேஷ் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு (டிச.22) பதிவு செய்துள்ளனர்.

Similar News

News December 25, 2025

தேனி: மதுபோதையில் பெண்ணை தாக்கிய இருவர் கைது!

image

பெரியகுளம் கீழ வடகரை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது குடும்பத்தினருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் கருப்பசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கருப்பசாமி மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் மது போதையில் மகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில் பெரியகுளம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.

News December 25, 2025

தேனி: ரூ.10 லட்சம் வரை மானியம்… ஆட்சியர் அறிவிப்பு!

image

விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டம் மூலம் சாதாரண விசைத்தறிகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக மாற்ற 50% (அ) ஒரு தறிக்கு ரூ.1 லட்சம் (அதிகபட்சம் 10 தறிகள்), புதிய ரேபியர் தறிகள் கொள்முதலுக்கு 20% (அ) ரூ.1.50 லட்சம் (5 தறிகள்), பொது வசதி மையம் அமைக்க 25% (அ) ரூ.60 லட்சம் வரை தமிழக அரசால் மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் <>https://tnhandlooms.tn.gov.in/pms<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News December 25, 2025

தேனி: காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

image

பெரியகுளம் பகுதியை சோ்ந்தவா் ராமசாமி. இவரது மனைவி விஜயலெட்சுமி. இருவரும் கடந்த 18-ஆம் தேதி சுக்காம்பாறை ஓடைவயல் பகுதியில் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் ராமசாமி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!