News September 11, 2025
தேனி: லாரி கவிழ்ந்து தலை சிக்கி டிரைவர் துடிதுடித்து பலி

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் பொன்கிருஷ்ணன். டிப்பர் லாரி ஓட்டுநராக இவர் நேற்று (செப்.10) வைகை அணை அருகே உள்ள தனியார் கல்குவாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றுவதற்காக டிப்பர் லாரியை ஓட்டிச் சென்றார். வனவியல் கல்லுாரி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த பொன்கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். வைகை அணை போலீசார் வழக்கு பதிந்தனர்.
Similar News
News September 11, 2025
தேனி: 13 போலீசார் பணியிட மாற்றம்..!

தேனி மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உதயசந்திரன், சந்திரன், நாகராஜ், கருப்பையா, நாராயணசாமி, சுந்தரம், போலீசார் செந்தில்குமார், தீபா, ரேவதி மற்றும் மாவட்டத்தில் பிற போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய போலீசார் எழில் வளவன், ஸ்டாலின், பாண்டியராஜ், சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்வரி ஆகிய 13 பேரை வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. சினேஹா பிரியா உத்தரவிட்டுள்ளார்.
News September 11, 2025
நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் இயற்கை வேளாண் சாகுபடி முறையை பின் பற்றும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும். பரிசு ரூ.2 லட்சம், பதக்கம் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் செப்.15க்குள் பதிவு கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். என வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
செப்.13 ல் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)

தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலம் வருகின்ற செப் 13-ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சுமூகமாக தீர்க்க விரும்பும் வழக்காடிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம் என நீதிபதி சொர்ணம் J.நடராஜன் தெரிவித்துள்ளார்.