News August 22, 2025
தேனி: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

தேனி இளைஞர்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு<
Similar News
News November 14, 2025
தேனி: ஜூஸ் வியாபரி தற்கொலையில் மர்மம்

தஞ்சாவூர், பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (34). இவர் கம்பத்தில் 4 வருடங்களாக ஜுஸ் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமகாத நிலையில் கடையின் அருகே வேலை செய்யும் பொம்முதாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் போலீசார் வழக்கு (நவ.13) பதிந்து விசாரணை.
News November 14, 2025
தேனி: நகராட்சி பணியாளரை கத்தியால் குத்தியவர் கைது

பெரியகுளம் தென்கரை பகுதியில் நேற்று (நவ.13) பெரியகுளம் நகராட்சி சார்பில் சாலை பணி நடைபெற்று உள்ளது. அங்கு வந்த காமராஜ் (27) என்பவர் பணியில் இருந்தவர்களிடம் மாமுல் கேட்டு தகராறு செய்துள்ளார். அதனை நகராட்சி தற்காலிக பணியாளர் தினேஷ் தட்டி கேட்ட நிலையில் அதனால் ஆத்திரமடைந்த காமராஜ், தினேஷை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.
News November 14, 2025
தேனியில் மூவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தேனி மதுவிலக்கு போலீசார் அக்டோபர் மாதம் 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான விக்னேஷ்குமார் (21), முத்துப்பாண்டி (19) ஆகிய இருவர். உப்புக்கோட்டையில் நவீன்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதான அவரது நண்பர் குணா (22) ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.


