News January 28, 2026
தேனி: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை ! APPLY NOW

தேனி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். SHARE IT
Similar News
News February 10, 2026
தேனி: கஞ்சா வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது

உத்தமபாளையம், கம்பம் பகுதிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக SP-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது உத்தபாளையம்-குமுளி பைபாஸ் சாலையில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சாக்கு பைகளில் 21 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கஞ்சா கடத்தல் தொடர்பாக வனிதா, அகில் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
News February 10, 2026
தேனி: 20.755 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 நபர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அந்த நபர்களிடமிருந்து மொத்தம் 20.755 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.