News January 29, 2026
தேனி: ரூ.2 லட்சம் மானியம்… கலெக்டர் அறிவிப்பு!

தேனி மக்களே, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த மகளிர் தொழில் முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க மானியமாக 25% அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் <
Similar News
News January 31, 2026
தேனி: Spam Calls-க்கு இனி END CARD

தேனி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News January 31, 2026
தேனி: மனைவி மீது கணவன் தாக்குதல்

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (36). இவரது கணவர் கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி மதுபோதையில் பாண்டிச்செல்வி இடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் தனது மனைவி பாண்டிச்செல்வியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து பாண்டிச்செல்வி அளித்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் கணேசன் மீது நேற்று வழக்குப்பதிவு.
News January 31, 2026
தேனி: சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை

தேவாரத்தை சோ்ந்தவர் முருகன். இவர் 2025ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சிறுமியின் பராமரிப்பு செலவுக்கு ரூ.3 லட்சம் வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


