News December 18, 2025
தேனி: ரூ.2 லட்சம் மானியம்… கலெக்டர் அறிவிப்பு!

தேனி மக்களே, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த மகளிர் தொழில் முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க மானியமாக 25% அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் <
Similar News
News December 26, 2025
தேர்வுக்கு அசல் அடையாள அட்டை கட்டாயம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நாளை (டிச.27ல்) நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 508 தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு வருபவர்கள் ஆதார், பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் ஆகிய சான்றுகளின் ஏதாவது ஒன்றின் அசல் வைத்திருப்பது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
News December 26, 2025
தேனி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்..!

தேனி மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 26, 2025
தேனி: கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது!

தேனி நகர் போலீசார் தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று (டிச.25) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த கவியரசன் (24) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கவியரசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


