News November 3, 2025

தேனி: ரூ.10,000 அபராதம் விதித்த வனத்துறை

image

கம்பமெட்டு சோதனை சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா எண் கொண்ட காரை சோதனை செய்த போது காரின் டிக்கியில் கம்பமெட்டு வனப்பகுதியில் கொட்டுவதற்காக ரெக்சின் கழிவுகளை எடுத்து வந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரின் உரிமையாளர் சோலைராஜாவிற்கு வனத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Similar News

News November 3, 2025

தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

image

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.4) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன்மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

தேனி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

தேனி மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.40,000 – ரூ.2,20,000 வரை வழங்கப்படும், கடைசி தேதி 16.11.2025 ஆகும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 3, 2025

போடி: பெட்டிக்கடையில் மது விற்பனை

image

போடி தாலுகா போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (நவ.2) மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வீரன் (42) என்பவர் அவரது பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வீரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!