News October 26, 2025
தேனி: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் <
Similar News
News February 8, 2026
தேனி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தேனி மக்களே; வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE
News February 8, 2026
தேனி: தவெக லெப்ட் பாண்டி மீது வழக்குப்பதிவு

தேனி நகர் பகுதியில் நேற்று நாதக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு தமிழக வெற்றி கழகத்தினர் சிலர் இடையூறு செய்யும் விதமாக செயல்பட்டனர். இதனால் தவெக மற்றும் நாதக இடையே அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தேனி நகர் போலீசார் தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 8, 2026
தேனி: இரு தரப்பினா் இடையே மோதல்; 4 பேர் மீது வழக்கு

தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கௌதமன் (40). உறவினா் இறப்புக்கு சுடுகாடு சென்றுவிட்டு வரும்போது இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சேகா், குபேந்திரன், குமரேசன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டதில் கெளதமன், குபேந்திரன் ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து இரு தரப்பினா் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவாரம் போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


