News April 28, 2025
தேனி: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

தேனி மக்களே மதுரை ரயில்வே கோட்டம் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியம் ரூ.19900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை இந்த <
Similar News
News February 27, 2026
தேனி: திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்னும் சற்றுநேரத்தில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டேன் என EPS மறுத்துவிட்டார். தவெக பக்கம் செல்லவும் OPS-க்கு விருப்பம் இல்லாததால் எதிர்கால தனது அரசியல் பயணம் கருதி இம்முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
News February 27, 2026
தேனி: பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

கொடைக்கானல் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (22) பெரியகுளம் பகுதியில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் 3.ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை கல்லூரி முடிந்து அவரது பைக்கில் வீடு திரும்பிய நிலையில் பெரியகுளம் சாலையில் உள்ள வேகத்தடையில் வேகமாக வந்த பைக் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தியாகராஜன் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு.
News February 27, 2026
தேனி: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

தேனி அருகே 15 வயது சிறுமி அதே பகுதியில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். போதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில் தற்போது செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் பிப்.25 அன்று பள்ளியில் இருந்து வந்த மாணவி படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டு இருப்பதை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை.


