News November 23, 2025
தேனி: மூவர் குண்டாசில் கைது – ஆட்சியர் அதிரடி

தேனி மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் கஞ்சா கடத்திய வழக்கில் சாய் (41) என்பவரை கைது செய்தனர். பெரியகுளம் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரை கடந்த மாதம் கொலை செய்த வழக்கில் போலீசார் மருதமுத்து (23), முத்துப்பாண்டி (21) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது எஸ்.பி பரிந்துரை செய்த நிலையில் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 14, 2026
தேனி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

தேனி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <
News February 14, 2026
தேனி: 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை

தேனி மாவட்டம், ஆசாரிபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 12.ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 11.ம் வகுப்பை விட தற்போது கணித பாடப்பிரிவில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த மாணவி சில தினங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News February 14, 2026
தேனி: வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி

போடி, சிலமலையில் மருந்துக் கடை நடத்தி வருபவர் சுனில் (52). இவர் நேற்று முன் தினம் அவரது காரில் கேரளா சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளார். அப்போது, லோயர்கேம்ப் பகுதியில் சபரிமலைக்கு சென்ற வேன் இவரது காா் மீது மோதியது. இந்த விபத்தில் சுனில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். மேலும், வேனில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து குமுளி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.


