News November 27, 2025
தேனி: முன் விரதோதத்தால் இளம்பெண் தவறாத சித்தரிப்பு

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ஜான்பாண்டியன் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜான்பாண்டியனுக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசி உள்ளார். இதன் காரணமாக அந்த இளைஞரின் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து ஜான்பாண்டியன் சமூக வலைதளத்தில் பரப்பினார். இது குறித்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் ஜான்பாண்டியனை கைது (நவ.26) செய்தனர்.
Similar News
News November 28, 2025
தேனி: வாடகை வீட்டில் இருக்கீங்களா? இத பாருங்க..

தேனி மக்களே, வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்
News November 28, 2025
மீண்டும் மஞ்சள் பை விருது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் https://theni.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
தேனி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கன மழை பெய்கிறது. இந்நிலையில் தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. SHARE IT.


