News September 28, 2025
தேனி: முன்விரோதத்தில் இளைஞர் கழுத்து அறுத்து கொலையா

உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசல் தெரு சையது அப்தாகிர் மகன் முகமது மீரான் 26, நேற்று முன்தினம் இரவு உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். முன்விரோதம் காரணமா இவரது கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Similar News
News January 10, 2026
தேனி: சபரிமலை சென்றவர் மீது கார் மோதி விபத்து..!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். நேற்று முன் தினம் கம்பம் பகுதியில் பாதயாத்திரை சென்ற பொழுது வீரபாண்டியன் என்பவர் ஓட்டி வந்த கார் திருநாவுக்கரசர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கம்பம் தெற்கு போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிந்து விசாரணை.
News January 10, 2026
தேனி: 10th போதும்… ரூ.37,000 சம்பளத்தில் BANK வேலை..!

தேனி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <
News January 10, 2026
தேனி: வாலிபருக்கு ஆபாச படம் அனுப்பியர் மீது வழக்கு..!

பெரியகுளத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தகிருஷ்ணா என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக நந்தகிருஷ்ணா மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் போனிற்கு நந்தகிருஷ்ணா பாலியல் தொந்தரவு சம்பந்தமாக ஆபாச படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் நந்தகிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்தனர்.


