News September 26, 2024
தேனி: முன்னாள் மனைவியின் 3 வது கணவர் மூலம் தாக்குதல்

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ஜோதிபாசு. இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து தனது 10 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று முன்விரோதம் காரணமாக முன்னாள் மனைவியின் 3-வது கணவர் வேல்முருகனின் உறவினர்கள் ஜோதிபாசு மற்றும் அவரது 10 வயது மகளை கம்பால் அடித்து தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரில் 9 பேர் மீது கண்டமனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News July 6, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 06.07.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News July 6, 2025
தேனியில் இலவச Tally பயிற்சிக்கு வரவேற்பு

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூலை 18 முதல் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் (டேலி) பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம் என மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

தேனி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <