News December 31, 2025
தேனி: முதியவருக்கு அரிவாள் வெட்டு!

போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலு (62). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகுராஜா என்பவருக்கும் பணம் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகுராஜா, பாலுவை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த பாலு தேனி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அழகுராஜா மீது போடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 31, 2025
தேனி: இ-சேவை, ஆதார் மையங்கள் 2 நாட்கள் இயங்காது

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (டிச.31) மற்றும் நாளை (ஜன.01) ஆகிய இரண்டு நாட்கள் மேற்படி மையங்கள் செயல்படாது என பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேற்படி, மையங்கள் 02.01.2026 முதல் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
தேனி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News December 31, 2025
தேனி: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தம்பதி..!

கூடலுார், லோயர்கேம்பை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கணேஸ்வரி. இருவரும் தங்களது பேத்தியுடன் நேற்று மதியம் மாடுகளுக்கு புல் அறுக்க முல்லைப் பெரியாற்று பகுதிக்கு சென்றனர். அப்போது ஆற்றை கடக்க முயன்ற போது மூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அதே பகுதியில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞா் சிறுமியை மட்டும் மீட்டுள்ளார். மேலும், தம்பதியர் இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


