News March 24, 2024
தேனி: மின் உற்பத்தி அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 17-ம் தேதி பெரியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று (மார்.23) முதல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்ததன் காரணமாக மீண்டும் பெரியாறு மின் நிலையத்தில் 66 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி துவங்கியது.
Similar News
News April 18, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 18, 2025
தேனி : உள்ளூரிலேயே வேலை வேண்டுமா?

தேனி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று காலை10 மணி முதல் 5.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ ஆகிய கல்வித் தகுதி உடையோர் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள <
News April 18, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய(ஏப்.18) நீர்மட்டம்: வைகை அணை: 56.27 (71) அடி, வரத்து: 52 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 98.07 (126.28) அடி, வரத்து: 5.62 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.